Type to search

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு

WORLD World Head Line World Top Story அவுஸ்திரேலியா

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வட நியூசிலாந்திலுள்ள தலைநகர் விலிங்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 6.2 magnitude earthquake New Zealand

தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதேபோல் வடக்கு தீவு, தெற்கு தீவு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

வெலிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டிடமும் குலுங்கியது. இதனால் அவை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பின்னர் நிலநடுக்கத்தினால் காயமோ, பெரிய அளவில் இழப்புகளோ ஏற்படவில்லை என தகவல் வெளியானதும் அவை மீண்டும் தொடங்கியது.

tags :- 6.2 magnitude earthquake New Zealand

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like