Type to search

மெக்சிகோவில் 155 மைல் வேகத்தில் பலத்த காற்றுடன் சக்திவாய்ந்த சூறாவளி

WORLD World Head Line World Top Story அமெரிக்கா

மெக்சிகோவில் 155 மைல் வேகத்தில் பலத்த காற்றுடன் சக்திவாய்ந்த சூறாவளி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மெக்சிகோவில் பசிபிக் கடற்கரையை நோக்கி வில்லா எனும் சக்திவாய்ந்த சூறாவளி 155 மைல் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. powerful hurricane strong winds speed 155 miles Mexico

இந்த சூறாவளியானது இன்று அல்லது நாளை கரையை கடக்கும் என தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. புயல், காற்று மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றால் தென்மேற்கு மற்றும் மேற்கு-மத்திய மெக்சிகோ பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி மூலம் கடல் கொந்தளிப்பாகவும், அதிகமான உயரத்தில் அலைகள் எழும்பும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூறாவளியால் ஆபத்தில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படும் அபாயமும் இருப்பதால் பாதுகாப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். கடலோரப் பகுதிககளில் உள்ள நகரங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சூறாவளி காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

tags :- powerful hurricane strong winds speed 155 miles Mexico

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like