Type to search

அமெரிக்காவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் பலி

WORLD World Head Line World Top Story அமெரிக்கா

அமெரிக்காவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் பலி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நியூயார்க் நகரின் புறநகர் பகுதியான ஸ்கோஹரீ எனும் இடத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 20 பேர் பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. least 20 people died car accident US

திருமண நிகழ்விற்க்கு சென்ற குழுவினர் சென்ற சிறப்பு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த தகவல்களை தற்போது வெளியிட முடியாது என்றும் நியூயார்க் மாநகர பொலிஸார் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரஸ்மீட் ஒன்றுக்கு (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் முழு விவரங்களும் வௌியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்விற்க்கு சென்ற குழுவினரின் வாகனம் மலைப்பகுதியில் இருந்து கீழே வேகமாக இறங்கி வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் வாகனத்தில் பயணித்தோர் மட்டுமின்றி, அப்பகுதியில் நடந்து சென்றோரும் கூட இதில் பலியாகி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

tags ;- least 20 people died car accident US

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like