சலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை
Share

அமெரிக்காவின் குளோரடாவை சேர்ந்தவர்கள் லிண்ட்சி மற்றும் ஆலன்மெகல்வர். இவர்களது குழந்தைகள் ஜெசி மற்றும் கிலொய் குழந்தைகள் தினமும் பெற்றோருக்குமுன் எழுந்து விடுவது வழக்கம். அவர்கள் சிறிது நேரம் விளையாடுவார்கள், சிறிது நேரம் கலர் அடிப்பார்கள், அப்புறம்தான் தங்கள் பெற்றோரை எழுப்புவார்கள். ஆனால் அன்று அவர்களை அவர்களது 4 வயது மகன் ஜேசி வந்து எழுப்பினான். அவன் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான், பதட்டத்தில் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. (3 year old child trapped washing machine)
பெற்றோருக்கு மூன்றே வார்த்தைகள்தான் புரிந்தன,கிலொய், உள்ளே, சலவை இயந்திரம் அவ்வளவுதான்…புதிதாக வாங்கிய சலவை இயந்திரத்திற்குள் கிலொய் ஏறி உட்கார, ஜெசி கதவை மூடி இயந்திரத்தினை ஆன் செய்து விட்டான். பதறி ஓடிச் சென்ற லிண்ட்சியும் ஆலனும் பார்க்கும்போது குழந்தை சலவை இயந்திரத்திற்குள் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
பதறிப்போய் சலவை இயந்திரத்தின் கதவைத் திறக்க முயன்றால், கதவு திறக்கவில்லை. ஒவ்வொரு பட்டனாக அழுத்த, ஒரு வழியாக கதவு திறந்தது, குழந்தையை வெளியே எடுத்தபோது நல்ல வேளையாக இயந்திரம் சுற்றியதில் அவளுக்கு இடிபட்டதோடு உடை நனைந்திருந்ததேயொழிய வேறொரு சேதமும் ஏற்படவில்லை.
நடந்ததை முகநூலில் பதிவிட்ட லிண்ட்சி , குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு மற்ற பெற்றோர்களை எச்சரித்துள்ளார். பொதுவாக சலவை இயந்திரங்களில் குழந்தைகள் அவற்றை பயன்படுத்தாமல் தடுப்பதற்காக சைல்ட் லாக் ஒன்று இருக்கும் என்றாலும், சில இயந்திரங்களில் கதவைத் திறக்க இயலும். பிள்ளைகள் உள்ளே போய் உட்கார்ந்து கதவை மூடிக்கொண்டாலும் ஆபத்துதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆர்கனஸ் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை ஒருத்தி இதேபோல் சலவை இயந்திரத்தினுக்குள் ஏறி உட்கார்ந்து கதவை மூடிவிட்டள். அந்த குறிப்பிட்ட மாடலில் கதவை மூடி இயந்திரத்தினை ஆன் செய்துவிட்டால் இடையில் கதவைத் திறக்க இயலாது.
அந்தக் குழந்தை பரிதாபமாக இறந்துபோனாள். எனவே சலவை இயந்திரங்கள் விடயத்தில் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அனைத்து பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் லிண்ட்சி.
tags :- 3 year old child trapped washing machine
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- ஜப்பானை தாக்கும் வெயில்; 14 பேர் பலி!
- அமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி
- ஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை
- இரையாக நினைத்து 8 வயது சிறுமியை தூக்க முயன்ற கழுகு!!
- இந்தோனேஷியாவில் ‘என்கவுன்டரில்’ : சுட்டுக் கொல்லப்பட்ட 11 குற்றவாளிகள்
- உலகிலேயே முன்னிலையில் நிற்கும் இண்டிகோ விமான நிறுவனம்
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Cinema.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com
- Tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com