அமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி
Share

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் மியாமி அருகே பைப்பர் பி.ஏ.-34 மற்றும் செஸ்னா 172 ஆகிய 2 விமானங்கள் நடுவானில் மோதி கொண்டுள்ளன. இந்த இரு விமானங்களும் டீன் இன்டர்நேஷனல் என்ற விமான பயிற்சி பள்ளியை சேர்ந்தவை. (Indian girl US 3 casualties including killed accident)
நேற்று பயிற்சி விமானங்களில் சிலர் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது பயிற்சியில் ஈடுபட்ட விமானங்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இந்திய சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து சம்பவத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர் என போலீசார் உறுதி செய்துள்ளனர். அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா செஜ்வால் என்பவரும் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் சாஞ்செஸ் (வயது 22) மற்றும் ரால்ப் நைட் (வயது 72) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
கடந்த 2007 மற்றும் 2017ம் ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தில் 24க்கும் மேற்பட்ட சம்பவங்கள் மற்றும் விபத்துகள் நடந்துள்ள வரலாறை இந்த பயிற்சி பள்ளி கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
tags :- Indian girl US 3 casualties including killed accident
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- 19-வது மாடியில் தொங்கியபடி உயிருக்கு போராடிய சிறுவன்
- பூமிக்கு அடியில் பல லட்சம் பெறுமதி வைர படிமங்கள் கண்டுபிடிப்பு!!
- சுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி!!
- சவுதியில் பாடகர் மஜித்தை கட்டிப்பிடித்த இளம்பெண் கைது!
- பாகிஸ்தானில் திருமண நிகழ்விற்கு சென்றவர்களுக்கு நடந்த பரிதாபம்
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Cinema.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com
- Tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com