Type to search

சுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி!!

Swiss WORLD World Head Line World Top Story

சுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி!!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

இந்தியர்கள் சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்பு செய்து இருக்கும் ரூ. 300 கோடி பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. முதல் கடந்த 2017ம் ஆண்டில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினரின் வைப்பு விவரங்களை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டது.(Swiss bank Rs. 300 crores Indians without claiming)

இதன்படி இந்தியர்களின் பணம் 101 கோடி பிராங்க்குகள் (சுமார் 7,000 கோடி) என தெரிவித்துள்ளது. இதில் 99.9 கோடி பிராங்க் (6,891 கோடி) நேரடியாகவும், பண்ட் மேலாளர்கள் மூலம் 1.62 கோடி பிராங்க்குகளாகவும் (112 கோடி) உள்ளது.இதன்படி இந்தியர்களின் வைப்பு 50.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் தொகை குறித்த பட்டியலை சுவிஸ் வங்கி கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியிடப்படாத அதில் 300 கோடி ரூபாய் வரை யாரும் உரிமை கோரப்படாத பணமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மொத்தம் 3, 500 கணக்குகள் அடையாளம் தெரியாத கணக்குகளாக இருக்கின்றன என்றும், அதில் குறைந்தது 3 கணக்குகள் இந்தியர்களுக்கு சொந்தமானவை என்றும், 3 கணக்குகள் இந்திய வம்சாவளியினருக்கு உரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சுவிஸ் வங்கிகள் இந்தப் பட்டியலை வெளியிடுகின்றன.

எனினும் இந்தியாவில் சுவிஸ் வங்கிக் கணக்கு குறித்த பரஸ்பரக் குற்றச்சாட்டுக்கள் தொடரும் நிலையில், யாரும் அந்த பணத்துக்கு உரிமைக் கோராத நிலையே நீடிக்கிறது குறிப்பிடத்தக்கது.

tags :- Swiss bank Rs. 300 crores Indians without claiming

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like