Type to search

பாகிஸ்தானில் திருமண நிகழ்விற்கு சென்றவர்களுக்கு நடந்த பரிதாபம்

WORLD World Head Line World Top Story

பாகிஸ்தானில் திருமண நிகழ்விற்கு சென்றவர்களுக்கு நடந்த பரிதாபம்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஐதராபாத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் சந்ராந்த் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து விட்டு இன்று அதிகாலையில் பேருந்தில் ஊர் திரும்பிய வேளையில், பேருந்தின் டயர் பஞ்சர் ஆனதால் நெடுஞ்சாலையோரம் வாகனத்தை நிறுத்தி டயர் மாற்றிக்கொண்டிருந்தனர். (Pakistan Accident Worried about wedding ceremony)

அப்பொழுது, அந்த வழியாக வேகமாக வந்த லாரி, நின்றுகொண்டிருந்த பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்து முற்றிலும் சிதைந்துபோனது. விபத்து பற்றி தகவல் அறிந்த பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஹாலா மற்றும் ஐதராபாத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் மோசமான வீதிகள் மற்றும் சாரதிகள் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களால் அடிக்கடி வீதி விபத்துகள் ஏற்படுகின்றன.

tags :- Pakistan Accident Worried about wedding ceremony

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like