Type to search

கஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம்! கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.

World Head Line World Top Story உலக நடப்பு கனடா

கஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம்! கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

கனடாவில் கடந்த 2001-ம் ஆண்டு முதலே மருத்துவத்துக்காக கஞ்சா பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது. Canada Federal Government Remove Barrier Consume Ganja

ஆனால் போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தொடர்ந்து புகார் வந்தது. அத்துடன், கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்த நிலையில் கனடா நாட்டில் கஞ்சா வளர்க்கவும், கேளிக்கை விடுதிகளில் முறையான அனுமதிகளுடன் கஞ்சாவை விற்பனை செய்யவும், சில கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்தவும் வகை செய்யும் சட்ட மசோதா உருவாக்கப்பட்டது.

இந்த மசோதா பாராளுமன்ற கீழவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. சமீபத்தில் பாராளுமன்ற மேலவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன்பின்னர் மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மீண்டும் பாராளுமன்ற கீழவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், 52 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவை எதிர்த்து 29 எம்.பி.க்கள் வாக்களித்தனர். அரசின் ஒப்புதல் கிடைத்ததும், செப்டம்பர் மாதம் முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி7 நாடுகளிலேயே கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கி பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

அமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை!

வாகன விபத்தில் கம்போடியா இளவரசர் படுகாயம்-மனைவி பலி!

மருமகள் மேகன் மார்க்கலுக்கு மாமனார் சார்லஸ் செய்த வேலை!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: