தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் விசாரிக்க குழு!
Share

Group inquire incident Thoothukudi
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரில் சென்று விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் ராஜராஜன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாகவும், நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசி முழு விசாரணை நடத்தவும் கோரியிருந்தார்.
அந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி ராஜிவ் ஷக்தேர், மனுதாரர் தனது கோரிக்கையை தேச மனித உரிமை ஆணையத்திடம் கொடுக்க அறிவுறுத்தியதுடன், மனுவை பரிசீலித்து இன்றைக்குள் முடிவெடுக்க தேசிய மனித உரிமை ஆணையத்தை அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மனுவை ஏற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையத்தின் 4 பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது. மேலும் இந்த குழு உடனடியாக நேரில் சென்று விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
More Tamil News
- உளவுத்துறை முதலமைச்சருக்கு தகவல் கொடுப்பதில்லையா – கீதா ஜீவன் கேள்வி!
- துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க தூத்துக்குடி செல்கிறார் – ரஜினி!
- த.மா.க தலைவர் வேல்முருகனை நேரில் உடல்நலம் விசாரித்தார் – ஸ்டாலின்!
- த.வா.க தலைவர் வேல்முருகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
- இந்தோனேசியாவுக்கு முதன் முறையாக செல்லும் மோடி!